Dada


டாடா

        இது குடும்ப திரைப்படம்.

கதை

         ஹீரோ & ஹீரோயின் கல்லூரி பயில்கிறார்கள். அப்போது காதல் மலர்கிறது. அப்போது ஹீரோயின் கர்ப்பம் ஆகிறாள். ஹீரோ இதை கேட்டு கலைக்க சொல்கிறான்.

          இதனை கொண்டு ஆரம்பிக்கும் கதை. வாழ்க்கையில் படும் கஷ்டங்களையும் பெற்றோர்கள் செய்யும் சில தவறுகளையும் இருவரும் இறுதியில் எப்படி சேர்ந்தார்கள் என்ற முடிவையும் நோக்கி கதை நகர்கிறது.

கவின்

          நட்சத்திர டிவியில் தெரிந்து இருந்தாலும் பிக் பாஸ் மூலம் தன் விளையாட்டு யுக்தியால் பல தமிழ் மக்கள் மத்தியில் பிரபலம்
அடைந்தவர். லிப்ட் என்ற திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.அதனால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகம். நான் அவர் நடிப்பு பற்றி பார்க்கும் போது எனக்கு பிக் பாஸ்க்கு உள் இருக்கும் கவின் தான் நியாபகம் வந்தது.

அபர்ணா தாஸ்

            இவர் விஜய் நடித்த பீஸ்ட் படம் மூலம் மிகவும் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர். இந்த படத்தில் மிகவும் நன்றாக நடித்துஉள்ளார். குறை என்பது எனக்கு இந்த படத்தில் இவரிடம் இல்லை.

மற்றவை

           பாக்யராஜ், VTV கணேஷ் இவர்கள் மேலும் இந்த படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு.

பாசிட்டிவ்

           காமெடி, கிளைமாக்ஸ், செண்டிமெண்ட்,கதை நகரல்

நெகடிவ்

          பாட்டு,கவின் vintage look

கடைசி படம் worth ஆஹ் இல்லையா

          தியேட்டர்ல போய் பார்க்குறது worth தான் கண்டிப்பா எல்லோரும் குடும்பத்தோட போய் பார்க்கலாம் பாருங்க.



Comments

Popular Posts